BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
சௌதியை ஏவுகணை மூலம் தாக்கியதாக கூறும் ஹூத்திகள்: அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூத்தி போராளிகள், சௌதி தலைநகர் ரியாத் மற்றும் அந்நாட்டின் செங்கடல் கடற்கரைப் பகுதியிலுள்ள ஆற்றல் மையங்கள் மீது ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.
பெண்ணை தாக்கி தலைமுடியை பிடித்து இழுத்த ஊர்க்காவல் படை வீரர் கைது – என்ன நடந்தது?
அதிகாரி ஒருவர், ஒரு பெண்ணை மோசமாகத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கீழே தள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதன் பின்னணி என்ன?
1910-ஆம் ஆண்டு செய்தித்தாளில் சுற்றப்பட்ட குழந்தை - போலீசுக்கு சவாலாக இருந்த நூற்றாண்டு பழமையான மரண மர்மம்
பிரிட்டனில் தரைப்பலகைக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட, 1910-ஆம் ஆண்டு செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த குழந்தையின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரி, இந்த வழக்கைத் தீர்க்க காவல்துறையினர் வழக்கமான முறைகளைத் தாண்டி சிந்திக்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.
நெடுஞ்சாலையில் இளம்பெண்ணை இறக்கிவிட்ட ஊபர் ஓட்டுநர் - குடும்பத்துக்கு ரூ.383 கோடி வழங்க உத்தரவு
கலிபோர்னியா நெடுஞ்சாலையில் 23 வயது பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில், அவரை காரில் இருந்து இறங்குமாறு ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 383 கோடி) இழப்பீடு வழங்க உபேர் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக டிரம்பிடம் புதிய ஆயுதம் - 100% வரி விதிக்கப்படுமா?
ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து அது சட்டமாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராகவும் 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்கான அதிகாரம் டிரம்பிற்கு கிடைத்துள்ளது. 100% வரி விதிக்கப்படுமா?
குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால் உங்கள் உடல் சீக்கிரம் முதுமையடையுமா?
ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பொதுவாக, 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒருவர் இதைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால், அது அவரது உடல்நலத்தையும் உடலின் முதுமை அடையும் செயல்முறையையும் பாதிக்கக்கூடும்.
டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட நோயல் டாடா எதிர்ப்பு ஏன்? 5 காரணங்கள்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் மற்றும் டாடா டிரஸ்ட்ஸின் முக்கிய பங்குதாரரான ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் ஆகியவை டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை ஆதரிக்கின்றன; ஆனால், டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா இதனை எதிர்க்கிறார்.
வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடி செய்து சாதித்த விவசாயி - முதல் ஓராண்டில் சந்தித்த சவால்கள் என்ன?
"அனைத்திந்திய வானொலி நிலையத்திலிருந்து போன் செய்து, வானொலியில் பிரதமர் தனது பெயரைச் சொல்லப் போவதாகக் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. மோடியின் வாயிலிருந்து எனது பெயரைக் கேட்டதை எனது குடும்பம் எப்போதுமே மறக்காது" என்று அவகேடோ விவசாயி வரதா ரெட்டி தெரிவித்தார்.
காணொளி, ஆடையில் மலம் கழித்த பிறகும் அப்படியே போட்டியை தொடர்ந்த வீராங்கனை, கால அளவு 0,47
பெய்ஜிங் போட்டியில் பெற்ற வெற்றியைத் துறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
'நாயகிக்கு ஒரு எழுத்துதான் வசனம்': மிஷ்கின் இயக்கிய 5 முக்கிய திரைப்படங்கள் மற்றும் புதுமை காட்சிகள் ஒரு பார்வை
'சித்திரம் பேசுதடி' (2006) தொடங்கி 'சைக்கோ' (2020) திரைப்படம் வரை, வணிக ரீதியிலான வெற்றி தோல்விகளைக் கடந்து, தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக தனித்து தெரியக்கூடியவர் மிஷ்கின். இன்று (செப்டம்பர் 20) அவரது பிறந்தநாள்.
அடுத்தடுத்து 9 பெண்கள் கொடூர கொலை: தனியே கடைக்கு செல்லவே நடுங்கும் பெண்கள் - சீரியல் கொலையாளியா?
இந்த வாரம் அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அந்தக் காலகட்டத்தில் 569 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1,052 பெண்கள் கொலை முயற்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க புதிய கட்டுப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு இந்த ஆண்டு புதிய கட்டுப்பாடுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு அறிவித்துள்ளது. அதுகுறித்து சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் என்ன சொல்கின்றன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































