டாஸ்மாக் பாரில் உணவகமா? பிபிசியிடம் அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

காணொளிக் குறிப்பு, டாஸ்மாக் பார்களில் உணவகமா? பிபிசிக்கு அமைச்சர் விளக்கம்
டாஸ்மாக் பாரில் உணவகமா? பிபிசியிடம் அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

டாஸ்மாக் பார்களில் உணவகங்கள் நடத்திக்கொள்ள அரசு அனுமதிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இது உண்மையா?

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செப்டம்பர் 17ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பின்வரும் தகவல் தெரிவித்தார்.

இதனிடையே டாஸ்மாக் பார்களில் உணவகங்கள் அதாவது ரெஸ்டாரெண்ட்க்கு அரசு அனுமதி வழங்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவின. இது குறித்து அறிந்துகொள்ள அமைச்சர் விக்னேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. தான் கூறிய தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த அவர், மதுக்கூடங்களில் உணவகங்களை அனுமதிப்பதாக நான் கூறவில்லை. இதுவரை இந்த பார்களில் பாக்கெட் உணவுப் பொருட்களை விற்க மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியின்றி பலரும் அடுப்புகளை வைத்து சமைத்து வந்தனர். இனிமேல் அடுப்புகளை வைத்து தின்பண்டங்களைத் தயார் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.' என்றார்

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் பார்கள் பெரும்பாலும் சுகாதாரக்கேட்டுடன், அசுத்தமாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, ''புதிதாக டாஸ்மாக் பார்களை டெண்டர் விடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதில் இத்தகைய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிபந்தனைகள் சேர்க்கப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி புதிய விதிமுறைகள் தயார் செய்வதால்தான் டாஸ்மாக் பார் டெண்டர் தள்ளிப்போகிறது.'' என்றார்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு