காணொளி: "விஜய்க்கு வாக்காளிப்பவர்களை குறை கூறியது ஏன்?"

காணொளிக் குறிப்பு, "என்னைக்கு தற்குறி, அணில்னு பேச ஆரம்பிச்சமோ..."
காணொளி: "விஜய்க்கு வாக்காளிப்பவர்களை குறை கூறியது ஏன்?"

விஜய்க்கு எதிரான திடமான அரசியலை திமுக முன்னெடுக்காததும், இத்தகைய தேர்தல் முடிவுகளுக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் பத்திரிகையாளர் மணி.

பிபிசியிடம் பேசிய அவர், விஜயை நேரடியாக விமர்சிக்காதது மட்டுமின்றி விஜய்க்கு வாக்களிப்போம் என்று கூறிய வாக்காளர்கள் சமூகவலைத்தளங்களில் குறிவைக்கப்பட்டதாக கூறினார்.

குறிப்பாக விஜய் ஆதரவாளர்களை மரியாதை குறைவான வார்த்தைகளால் சமூகவலைத்தளங்களில் விமர்சித்தது திமுகவுக்கு எதிராக மாறியிருக்கக் கூடும் என்பது அவரது கருத்தாக உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு