'விஜய் மீது வழக்கு பதியுமாறு ஸ்டாலினிடம் சொன்னோம்' - ரகுபதி

காணொளிக் குறிப்பு, காணொளி: “கரூர் சம்பவத்தில் மனிதாபிமான அடிப்படையில் விஜய் மீது வழக்கு தொடரவில்லை”
'விஜய் மீது வழக்கு பதியுமாறு ஸ்டாலினிடம் சொன்னோம்' - ரகுபதி
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் விபத்தில் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மனிதாபிமானத்தால்தான் விஜய் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "அந்நிகழ்வுக்கு விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணம். சினிமா பாணியில் பேருந்தின் மீது ஏறி அவர் பாடி ஆடியதுதான் விபத்தை நேரடியாகத் தூண்டியது. சட்டம் மற்றும் காவல் துறையின்படி அவர்தான் முதல் குற்றவாளி" என்று குறிப்பிட்டார்.

"அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த நான் மற்றும் பிற திமுக மூத்த தலைவர்கள், இந்தச் சம்பவத்திற்கான முதல் தகவல் அறிக்கையில் (FIR) விஜய்யை முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மன்றாடினோம்" என்று அவர் தெரிவித்தார். அப்போது முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மனிதாபிமான அடிப்படையில் பெருந்தன்மை காட்டியதாகக் குறிப்பிட்ட ரகுபதி, "விஜய் ஒரு நடிகர், தற்போதுதான் புதிதாகக் கட்சித் தொடங்கியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம்" என்று தடுத்துவிட்டதாக ரகுபதி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு