மணமகன்களுக்கு ரூ.1 கோடிக்கு பணமாலை அணிவித்த மைத்துனர்

காணொளிக் குறிப்பு, மணமகன்களுக்கு ரூ.1 கோடிக்கு பணமாலை அணிவித்த மைத்துனர்
மணமகன்களுக்கு ரூ.1 கோடிக்கு பணமாலை அணிவித்த மைத்துனர்
பிரசுரிக்கப்பட்டது

கூரையிலிருந்து தரை வரை நீளும் இந்த ரூபாய் நோட்டு மாலைகள், இரண்டு மணமகன்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாலைகளை அணிவித்தவர், அவர்களின் மைத்துனர்.

இந்தக் காணொளி உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தது. இதில், இரண்டு மணமகன்கள் மிக நீளமான ரூபாய் நோட்டு மாலைகளை அணிந்திருப்பதைக் காணலாம்.

திருமண ஊர்வலத்தின்போது, இந்த இரு மணமகன்களுக்கும் அவர்களின் மைத்துனர்கள் இந்த மாலைகளை அணிவித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாலையின் மதிப்பும் ஒரு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இரு மணமகன்களும் பளிங்குக் கல் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களின் மைத்துனரான யோகேஷ் குமார், ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருக்கிறார்.

தனது இரு மாப்பிள்ளைகளுக்காக யோகேஷ் குமார் இந்த வித்தியாசமான ரூபாய் நோட்டு மாலைகளைத் தயாரிக்கச் செய்துள்ளார்.

இந்த மாலைகள் சுமார் 100 அடி நீளம் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

மாலைகள் மிகவும் நீளமாக இருந்ததால், மணமகன்கள் மாடியில் நின்றபடி அவற்றை அணிவித்துக் கொண்டனர். மாலைகள் கீழே சாலை வரை நீண்டிருந்தன. அவற்றைத் தாங்கிப் பிடிக்கப் பலரும் சிரமப்பட வேண்டியிருந்தது.

இந்தக் காட்சியைக் கண்டு உறவினர்களும் கிராம மக்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு