சாலையில் சென்ற பெண்ணிடம் நகையை ஒருவர் பறிக்க முயன்ற காட்சி

காணொளிக் குறிப்பு, சாலையில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
சாலையில் சென்ற பெண்ணிடம் நகையை ஒருவர் பறிக்க முயன்ற காட்சி
பிரசுரிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சைக்கிளில் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகையை ஒருவர் பறிக்க முயன்ற காட்சி இது.

புளியம்பட்டியில் விருதுநகர் சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு கடந்த 26 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

பிபிசி தமிழிடம் பேசிய அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலன், அந்தப் பெண் அணிந்திருந்தது கவரிங் நகை என கூறினார். முதலில் அந்த பெண் புகார் அளிக்காத நிலையில், போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் பின்னர் புகார் அளித்திருக்கிறார். சிசிடிவி காட்சி அடிப்படையில் அந்த நபரை தேடி வருவதாகவும் சிவபாலன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு