‘இந்த குடை புயல், மழையையும் தாங்கும்' - ஆந்திராவில் தயாராகும் மூங்கில் குடைகள்

காணொளிக் குறிப்பு, ‘கடும் மழை, புயலைத் தாங்க அசத்தலான குடை’
‘இந்த குடை புயல், மழையையும் தாங்கும்' - ஆந்திராவில் தயாராகும் மூங்கில் குடைகள்
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் "கடும் மழையிலும் புயல் காற்றிலும் கூட உடையாமல் தாக்குப் பிடிக்கும் பாரம்பரிய மூங்கில் குடைகள், ஆடு மேய்ப்பவர்களுக்குப் பெரிதும் உதவி வருகின்றன" என்கிறார் பஸ்வராஜபேட்டையைச் சேர்ந்த எர்ரய்யா.

"மூங்கில் பட்டைகள் மற்றும் மரக் கைப்பிடியால் செய்யப்படும் இக்குடைகள் பலத்த காற்றில் பறந்துவிடாமல் கைகளில் உறுதியாக இருக்கும் என்றார். சாதாரண குடைகள் சேதமடையும் காலநிலையிலும் இது பழுதடைவதில்லை. ஆடு மேய்க்கச் செல்பவர்கள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்கவும், இதன் அடியில் அமர்ந்து சமைக்கவும் இது பயன்படுகிறது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை உழைக்கும் இந்தக் குடைகள், உள்ளூர் சந்தைகளில் 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன" என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு