பனிப்பாறை உடைந்தது முதல் பாலம், பேருந்துகளை பெருவெள்ளம் அடித்து சென்றது வரை - மக்கள் பதைபதைத்த வீடியோ

காணொளிக் குறிப்பு, நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை சரிவால் சீறிப்பாய்ந்த பெருவெள்ளம்
பனிப்பாறை உடைந்தது முதல் பாலம், பேருந்துகளை பெருவெள்ளம் அடித்து சென்றது வரை - மக்கள் பதைபதைத்த வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

நேபாள-திபெத் எல்லை பகுதியில் நீர் பிரமாண்டமாக சீறிப்பாய்ந்து சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

இமயமலையின் உயரமான பகுதியில் பனிப்பாறை சரிவாக தொடங்கிய இந்த நிகழ்வு, பேரழிவை ஏற்படுத்த கூடிய திடீர் வெள்ளமாக மிக விரைவாக மாறியது. நகரங்களுக்குள் ஊடுருவிச் சென்றதுடன், பாலங்களை சேதப்படுத்தி, வழியில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது. உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கானோரை இன்னும் காணவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட காணொளிகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தி, இந்த திடீர் வெள்ளத்தின் பாதையை 'பிபிசி வெரிஃபை' ஆய்வு செய்தது.

நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் உள்ள மலைகளின் ஊடாக திரிசூலி ஆறு பாய்கிறது.

முதலில் வெளியான காணொளிகளில் இப்பேரிடர் நிகழ்வதற்கு முந்தைய தருணங்கள், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் கட்டடங்களை வெள்ளம் சூழும் காட்சிகள் ஆகியவற்றை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, ஆற்றில் நீர் சீறிப்பாய்ந்து வருவதையும், பேருந்துகளையும் மக்களையும் அடித்துச் செல்வதையும் காண்கிறோம்.

சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், கட்டுமானத்தில் இருந்த ஓர் அணை சிதைந்தது.

அங்கிருந்து மேலும் 10 கிலோமீட்டர் தொலைவில், ஆற்றின் கீழ் பகுதியில்.... தப்பிச் செல்ல தங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருப்பதை கட்டுமான பணியாளர்கள் உணர்கிறார்கள். இன்னும் கீழ்ப்பகுதியில், மக்கள் பயத்துடன் உயரமான இடங்களை தேடி ஓடுகிறார்கள். சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில், வெள்ளம் முன்னோக்கிப் பாய்ந்து, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழிக்கிறது. அதன் தொடர் விளைவை நாம் காண முடிகிறது.

திரிசூலி நகரின் வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பேருந்தில் தப்பிச் செல்ல முயலும் பயணிகள் பார்க்கும் அதே பாலத்தை நாமும் காண்கிறோம். திடீரென அந்தப் பாலம் இடிந்து விழுகிறது. ஆற்றின் கீழ்ப்பகுதியில், ஒரு உறுதிப்படுத்தப்பட்ட காணொளியில் ஒரு பாலத்தின் பாகங்கள் மற்றொன்றின் மீது மோதி நொறுங்குவது உட்பட சிதிலங்களை காண முடிகிறது. மேற்கே சில மைல் தொலைவில் குப்பைகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் மற்றொரு பாலத்தின் மீது மோதுவதை ஒரு காணொளி காட்டுகிறது.

இதற்கான காரணத்தை புரிந்துகொள்ள செயற்கைக்கோள் படங்கள் நமக்கு உதவுகின்றன.

சரிந்து விழுந்த பனிப்பாறை அமைந்திருந்த இடம் இது தான் என்றும், இங்குதான் பனி மற்றும் பாறைகள் பெருமளவில் சரிந்து விழுந்தன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர்களில் இந்தச் சிறுவனும் ஒருவர். எனினும், அவர்களில் பெரும்பாலானோருக்கு இந்த பெருவெள்ளம் பேரழிவை மட்டுமே எஞ்சியிருக்க செய்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு