நேரலை, அதிக இடங்களில் முன்னிலை - விஜய்க்கு திரைத்துறையினர் வாழ்த்து

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தாரின் நிலை என்ன?

    ஆதவ் அர்ஜுனா

    பட மூலாதாரம், @AadhavArjuna/X

    படக்குறிப்பு, ஆதவ் அர்ஜுனா

    'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் குடும்பத்தில் மூன்று பேர் வெவ்வேறு கட்சி சார்பாக போட்டியிட்டனர். அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் என்ன நிலவரம்?

    மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது அத்தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், தவெக சார்பில் கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    லீமா ரோஸ்

    பட மூலாதாரம், Social media

    படக்குறிப்பு, லீமா ரோஸ்

    மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில், திமுக சார்பில் கார்த்திக் மோகன், அதிமுக சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் ரோஷிணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    அதேபோன்று, மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ்மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து காமராஜ் நகரில் போட்டியிட்டார். இத்தொகுதியில் தற்போது அவர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்திதியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  2. திமுக, அதிமுகவை விஞ்சி விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?

    விஜய்

    பட மூலாதாரம், TVK

    படக்குறிப்பு, விஜய் (கோப்புப்படம்)

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவரைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரும் தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர்.

    தற்போதைய நிலவரம் தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இப்படிப்பட்ட முடிவுகளை இந்த தேர்தல் வழங்கும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் என்ன நடந்தது? விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி? முழு கட்டுரையை வாசிக்க:

  3. "முதல் தேர்தலிலேயே பெரிய தாக்கம்" - விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

    சிவகார்த்திகேயன்
  4. தவெக முன்னிலை; விஜய் வீட்டின் முன் என்ன நிலவரம்?

    விஜய் வீட்டின் முன்பு என்ன நிலவரம் என்பது குறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் விஜயானந்த், இந்த நேரலையில் விளக்குகிறார்.

  5. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
  6. தஞ்சாவூர் தொகுதியில் தவெக வெற்றி

    தஞ்சாவூர் தொகுதியில் தவெக வெற்றி

    தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய் சரவணன் 87705 வாக்குகள் பெற்று வெற்றி

    திமுக வேட்பாளர் ராமநாதன் பெற்ற வாக்குகள்: 70750 பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் பெற்ற வாக்குகள்: 26790

  7. தவெக அதிக இடங்களில் முன்னிலை - திரைத்துறையினர் வாழ்த்து

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

    பட மூலாதாரம், SANTHOSH NARAYANAN / FACEBOOK/X

    படக்குறிப்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், திரைத்துறையினர் பலரும் தவெகவுக்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எக்ஸ் பக்கத்தில் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

    “நம் மாநிலத்தில் வரலாறு படைக்கப்படுகிறது. வாழ்த்துகள் விஜய் சார்! நான் பிறந்ததிலிருந்து திராவிடக் கட்சிகள் தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக்கொள்வதை மட்டுமே பார்த்திருக்கிறேன், இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாகும். முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, ஆனாலுக்கு இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம்.”

    நடிகர் ஆர்.ஜே. பாலாஜி

    “இது வரலாற்றுபூர்வமானது.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!

    விஜய் சாருக்கும் அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள்!”

    நடிகர் ஜீவா

    “பிளாஸ்ட்டு, பிளாஸ்ட்டு…”

    நடிகர் சர்வானந்த்

    “நான் முன்பே கூறியது போல, சில பயணங்கள் நாம் நினைப்பதை விட பெரியவை.

    இந்தத் திருப்புமுனையான தருணத்தில் விஜய் சாருக்கு வாழ்த்துகள். சினிமா முதல் தலைமைப் பொறுப்பு வரை, நீங்கள் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளீர்கள்.

    இனி வரவிருக்கும் பயணங்களுக்கு உங்களுக்கு வலிமையும், நோக்கமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.”

  8. மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

    மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

    மேலூர் தொகுதியில் 2,724 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மதுரை வீரனை தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன்

  9. கூடலூர் தொகுதியில் திமுக வெற்றி

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026, கூடலூர்

    கூடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திராவிடமணி 65590 வாக்குகள் (22833 வித்தியாசம்) பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பொன். ஜெயசீலன் 42757 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தவெக வேட்பாளர் தீபக் சாய் கிஷோர் 34962 மூன்றாம் இடம் பிடித்தார்.

  10. தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா

    காணொளிக் குறிப்பு, தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா

    தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காலை 1.12 மணி நிலவரப்படி தவெக 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு த்ரிஷா வந்தார்.

  11. திமுக கூட்டணி கட்சிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், SELVAPERUNTHAGAI K / X

    படக்குறிப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

    திமுக கூட்டணி கட்சிகளின் நிலவரம்:

    காங்கிரஸ் போட்டியிட்டவை: 27 இடங்கள், முன்னிலை - 4 இடங்கள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டவை: 5 இடங்கள், முன்னிலை: 2 இடங்கள்

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டவை: 5 இடங்கள், முன்னிலை - 2 இடங்கள்

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டவை: 8 இடங்கள், முன்னிலை - 2 இடங்கள்

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டவை: 2 இடங்கள், முன்னிலை - 1

    தேமுதிக போட்டியிட்டவை: 10, முன்னிலை - 1

  12. விஜய் திரை வழியே அரசியலிலும் மக்கள் மனதை வென்ற கதை

    விஜய்

    பட மூலாதாரம், X/TVK

    தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது.

    தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஆட்சியில் இருந்த மற்ற பெரிய கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    தயக்கம் மிகுந்த நாயகனாக 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய், இப்போது அரசியலில் தனது முதல் தேர்தலிலேயே வென்று காட்டியுள்ளார். அவரது தனி வாழ்வும் திரைவாழ்வும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், அரசியலில் விஜய் ஒரு புதிய பாணியை கையாளுகிறார்.

    விஜயின் திரைப்படங்களும் அவரது அரசியலும் சொல்வது என்ன? விஜயின் பயணத்தை விரிவாக விளக்கும் இந்த கட்டுரையை படிக்க:

  13. 'தவெக முன்னிலை' - விஜய் குடும்பம் கொண்டாட்டம்

    காணொளிக் குறிப்பு, தவெக முன்னிலை - விஜய் குடும்பம் கொண்டாட்டம்

    சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் அடையாறு இல்லத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  14. "மக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டனர்" - ஆர்.எஸ். பாரதி

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி
    படக்குறிப்பு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி

    மக்கள் தங்கள் கடமையை செய்யத் தவறிவிட்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, தவெக 106 இடங்களிலும் அதிமுக கூட்டணி 69 இடங்களிலும் திமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “தொங்கு சட்டப்பேரவை தான் வரும் என நினைக்கிறேன்.”

    இந்த முடிவுகளை தான் ஒரு மௌன புரட்சியாக பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் முழுவீச்சில் பரப்புரை மேற்கொண்டும் இத்தகைய முடிவு வந்திருப்பது குறித்து பேசிய ஆர்.எஸ். பாரதி, “திமுக தன் கடமையை முழுமையாக செய்தது, மக்கள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர்.

    இந்த முடிவுகளின் பின்னணி குறித்து இனிமேல் தான் ஆராய வேண்டும்.” என தெரிவித்தார்.

  15. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 - இதுவரையிலான முக்கிய தகவல்கள்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள், காணொளிகள் உள்ளிட்டவற்றை இந்த பக்கத்தில் தொடர்ந்து வழங்கிவருவது செய்தியாளர் நந்தினி வெள்ளைச்சாமி.

    இந்த பக்கத்தில் நீங்கள் தற்போது தான் இணைந்திருக்கிறீர்களா? தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீங்கள் அறிய வேண்டிய முக்கியமான தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

    • தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 68 இடங்களிலும் திமுக கூட்டணி 59 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.
    • தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
    • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் காலை முதல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு அத்தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
    • பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
    • தவெக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
    • 'தவெக முன்னிலை பெற்றுள்ளது மாற்றத்தைக் குறிக்கிறது' என பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
  16. ‘தவெக முன்னிலை மாற்றத்தைக் குறிக்கிறது’- மூத்த பத்திரிகையாளர் மாலன்

    காணொளிக் குறிப்பு, காணொளி: ‘தவெக முன்னிலை மாற்றத்தைக் குறிக்கிறது’- மூத்த பத்திரிகையாளர் மாலன்

    தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

    காலை 12 நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 70 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 57 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    'தவெக முன்னிலை பெற்றுள்ளது மாற்றத்தைக் குறிக்கிறது' என பிபிசி தமிழிடம் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் மாலன்.

  17. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் - தற்போதைய நிலவரம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026

    தற்போதைய நிலவரப்படி தவெக 106 இடங்களிலும் அதிமுக 69 இடங்களிலும் திமுக 59 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  18. விஜய் இரு தொகுதிகளிலும் முன்னிலை: செங்கோட்டையன் உள்பட தவெக தலைவர்கள் நிலை என்ன?

    விஜய்

    பட மூலாதாரம், TVK

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 111 தொகுதிகளில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் என்ன நிலவரம் என்ன என்பதை இக்கட்டுரையில் விரிவாக படிக்கலாம்:

  19. பனையூர் தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்

    சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் பனையூர் தவெக அலுவலகம் முன்பு கொண்டாட்டம்

    காணொளிக் குறிப்பு, பனையூர் தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்