விஜய், செங்கோட்டையன், ஆனந்த் உள்பட தவெக தலைவர்களின் தொகுதி நிலவரம்

பட மூலாதாரம், TVK
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 104 தொகுதிகளில் தற்போது (01:00 நிலவரப்படி) முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் என்ன நிலவரம்?
திருச்சி கிழக்கு
திருச்சி கிழக்கு தொகுதியில் நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 16,579 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 6,499 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
பெரம்பூர்
பெரம்பூர் தொகுதியில் ஐந்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 29,043 வாக்குகள் பெற்று விஜய் முன்னிலை வகிக்கிறார்.
திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 10,971 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம்

பட மூலாதாரம், TVK
தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் செங்கோட்டையன், பத்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 40,077 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
திமுக வேட்பாளர் நல்லசிவம் 9,105 வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
தியாகராய நகர்
தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆனந்த் ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 20,411 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுகவின் ராஜா அன்பழகன் 6,284 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
வில்லிவாக்கம்

பட மூலாதாரம், TVK
தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 24,634 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் 7,766 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
திருச்செங்கோடு
தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருண்ராஜ், நான்காவது சுற்று முடிவில் 12,311 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ஈஸ்வரன் 10,008 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம்
த.வெ.க வேட்பாளர் நிர்மல்குமார் ஒன்பதாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 36,963 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் 9,253 கிருத்திகா தங்கப்பாண்டி வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
எழும்பூர் - தனி
இங்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர் ராஜ்மோகன் ஏழாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 28,662 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுகவின் தமிழன் பிரசன்னா 10,075 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
தூத்துக்குடி

பட மூலாதாரம், @Actor_Srinath/X
தூத்துக்குடியில் த.வெ.கவின் ஸ்ரீநாத் பத்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 39,981 பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 15,875 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
திருப்பூர் வடக்கு
இங்கு த.வெ.க வேட்பாளர் சத்யபாமா, ஒன்பதாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 39,320 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் 19,163 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































