35 பந்துகளில் அபிஷேக் சதம்: அபிஷேக் - சூர்யவன்ஷி அதிரடியால் 199 ரன் இலக்கை 14வது ஓவரில் எட்டிய இந்தியா


இந்தியா, நியூசிலாந்து, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சாம்சன், டி20, வெற்றி
    • எழுதியவர், தினேஷ் குமார்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி உள்ளது. கடந்த போட்டியில் பெரியளவில் அணிக்குக் கைகொடுக்காத வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அசத்தினார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி, கேக் டின் (cake tin) என்றழைக்கப்படும் வெலிங்டனின் ஹென்றி மைதானத்தில் நடைபெற்றது. பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு ஓய்வளிக்கப்பட்டது.

கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களான ஃபெர்குசன், நேதன் ஸ்மித் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. மில்னே, ஜேமிசன், ஃபிஷர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர். 2-0 என்று தொடரில் முன்னிலை வகித்த இந்தியா, கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் களமிறங்கியது.


இந்தியா, நியூசிலாந்து, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சாம்சன், டி20, வெற்றி
படக்குறிப்பு, அபிஷேக் சர்மா

மூன்றாவது முறையாக டாஸ் வென்ற ஸ்ரேயாஸ்

இந்தியா, நியூசிலாந்து, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சாம்சன், டி20, வெற்றி

இந்திய அணி தரப்பில் இடுப்பு தசைப்பிடிப்பில் இருந்து முழுவதுமாக குணமடையாததால், இன்றைய போட்டியிலும் இஷான் கிஷன் விளையாடவில்லை. இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.

சரியான ஃபுட்வொர்க் இல்லாமல், அர்ஷ்தீப் சிங் பந்தை கவர் திசையில் தூக்கி அடிக்க முயன்று, பேக்வர்ட் பாயிண்ட்டில் கேட்ச் கொடுத்து சைஃபர்ட் ஆட்டமிழந்தார். ஆடுகளத்தில் ஸ்விங்கும் தாறுமாறான பவுன்ஸும் இருந்தபோதும், டேரில் மிட்செலும் ஃபின் ஆலனும் அதிரடியை நிறுத்தவில்லை. குறிப்பாக மூன்றாவது வீரராகக் களமிறங்கிய மிட்செல், ஷார்ட்டாக வீசப்பட்ட பந்துகளை அநாயசமாக எதிர்கொண்டார்.

இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த பார்ட்னர்ஷிப்பை நிதிஷ்குமார் ரெட்டி பிரித்தார். அடுத்தபடியாக பிலிப்ஸ், ஜேக்கப் ஆகியோரும் கைகொடுக்க நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது. இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப், அக்சர், நிதிஷ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

தொடக்க பேட்டராக சூர்யவன்ஷி

இந்தியா, நியூசிலாந்து, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சாம்சன், டி20, வெற்றி

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, 'இளம் புயல்' வைபவ் சூர்யவன்ஷி இருவரும் அபாரமான தொடக்க ஏற்படுத்திக் கொடுத்தனர். கடந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் இறங்கி சொதப்பிய சூர்யவன்ஷி, இந்த முறை சாம்சனுக்குப் பதிலாக தொடக்க வீரராக களமிறங்கினார்.

எவ்வித அழுத்தமும் இன்றி முதல் பந்தை எதிர்கொண்ட சூரியவன்ஷி, டஃபி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மிட் ஆன் திசையில் பவுண்டரி விளாசினார். ஓவரின் மூன்றாவது பந்தில் டீப் பாயிண்ட் திசையில் ஒரு அட்டகாசமன சிக்ஸரை பறக்கவிட்டார்.

தொடக்க பேட்டர் ஒருவர் அதிரடியைக் கையில் எடுக்கும் போது, எதிர் முனையில் இருப்பவர் அடக்கி வாசிப்பது வழக்கம். ஆனால், டி20 கிரிக்கெட்டின் இலக்கணங்களை மாற்றி எழுதிய அபிஷேக் சர்மா, அதே ஓவரில் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை ஆஃப் சைடில் விளாசினார். இப்படியாக, முதல் ஓவரிலேயே இந்திய அணி 26 ரன்களைக் குவித்தது.

ஆஃப் சைட் மாஸ்டர்கிளாஸ் எடுத்த அபிஷேக் சர்மா

இந்தியா, நியூசிலாந்து, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சாம்சன், டி20, வெற்றி

மில்னேவின் அடுத்த ஓவரைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல விளையாடிய அபிஷேக், 2 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் விரட்டினார். ஹென்றி மைதானத்தின் அமைப்பை தனக்குச் சாதமாக இந்திய தொடக்க பேட்டர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அதாவது, அங்கு நேர் பவுண்டரிகள் பெரிதாக இருக்கும். ஆனால், ஸ்கொயர் பவுண்டரிகள் மிகவும் சிறியவை.

முதல் இரு ஓவர்களில் 43 ரன்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வாரி வழங்கியதால், அடுத்த ஓவரை வீச ஆஃப் ஸ்பின்னர் பிரேஸ்வெல்லை அழைத்தார் கேப்டன் சாண்ட்னர். ஆனால், 10 ஓவரில் போட்டியை முடிக்கும் திட்டத்துடன் களமிறங்கியது போல விளையாடிய அபிஷேக், முதல் மூன்று பந்துகளில் 4,6,4 என 14 ரன்களை விளாசினார்.

ரன் வேகத்தை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டுமென, ஜேமிசன் கையில் பந்தைத் திணித்தார் கேப்டன் சாண்ட்னர். ஆனால், அந்த ஓவரில் அபிஷேக் சர்மா, 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசியதுடன் 15 பந்துகளில் அரைசதத்தையும் எட்டினார். மறுமுனையில் சூர்யவன்ஷி, பவர்பிளேவின் கடைசி ஓவரை தனக்கானதாக மாற்றிக்கொண்டார்.

பவர்பிளேவில் 118 ரன்கள் குவித்த இந்தியா

இந்தியா, நியூசிலாந்து, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சாம்சன், டி20, வெற்றி
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரண்டாவது ஓவரை வீச வந்த டஃபியை பவுண்டரியுடன் வரவேற்ற சூர்யவன்ஷி, அந்த ஓவரில் மொத்தமாக 18 ரன்களை குவித்தார். பவர்பிளே முடிவில் 118 ரன்களை குவித்த இந்திய அணி, டி20 இல் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய இரண்டாவது அணி என்ற சாதனையையும் படைத்தது. எட்டாவது ஓவரின் முதல் பந்தில் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த சூர்யவன்ஷி, ஃபிஷர் பந்துவீச்சில் லாங் ஆனில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சூர்யவன்ஷி ஆட்டமிழந்த பின்பு, ரன் ரேட் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதே ஓவரில் மிட் விக்கெட் திசையில் இரண்டு பிரமாண்டமான சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார். இன்னிங்ஸின் பத்தாவது ஓவரில் ஜேமிசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, சதத்தை எட்டினார். இந்திய அணி வெற்றியின் விளிம்புக்குச் சென்றதும், அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்தன.

அதிரடி சதமடித்த அபிஷேக் சர்மா ஜேமிசன் பந்துவீச்சில் பிலிப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 9 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 113 ரன்களைக் குவித்தார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், 5 ரன்களில் சாண்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஆட்ட நாயகன் விருதுபெற்ற அபிஷேக் சர்மா

இந்தியா, நியூசிலாந்து, அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, சாம்சன், டி20, வெற்றி

வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்துவீச்சில் 14 ரன்களில் சாம்சன் ஆட்டமிழந்தார். 40 பந்துகள் மீதமிருந்த நிலையில், பவுண்டரி அடித்து நமன் தீர் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கச் செய்தார்.

இந்திய அணியின் வெற்றிக்கு மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் பந்துவீசியதும் ஒரு முக்கிய காரணம். நேர் பவுண்டரிகள் பெரியது என்பதால், முழு நீளத்தில் பந்துவீசி நியூசிலாந்து அணியினரின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதிரடி சதமடித்த அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு