காணொளி: டெல்லியில் 'மாதிரி நாடாளுமன்றத்தை' நடத்திய இந்தியா கூட்டணி

காணொளிக் குறிப்பு, மாதிரி நாடாளுமன்றத்தை நடத்திய இந்தியா கூட்டணி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், சனிக்கிழமை இந்தியா கூட்டணியினர் செய்த ஒரு செயல் கவனம் பெற்றுள்ளது.

டெல்லியில் மாதிரி நாடாளுமன்றம் ஒன்றை அமைத்து ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் அடையாளத் தீர்மானம் ஒன்றை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா மற்றும் ஞானேஷ்குமாரை கடுமையாக விமர்சித்தார். மக்களின் குரலுக்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்கப்படுவதில்லை என்றும், அதனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒன்றுகூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதே நேரம், பாஜகவினர் எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கையை நாடகம் என விமர்சித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு