நேபாளம்: சுரங்கத்திற்குள் சிக்கிய 2 பேர் 9 நாளுக்கு பிறகு உயிருடன் மீட்பு
நேபாளம்: சுரங்கத்திற்குள் சிக்கிய 2 பேர் 9 நாளுக்கு பிறகு உயிருடன் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 9 நாட்களுக்கு பிறகு இரண்டு பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
ரசுவா மாவட்டத்தில் உள்ள மின்னுற்பத்தி திட்ட சுரங்கத்தில் இந்த இரண்டு பேர் சிக்கியிருந்தனர். இவர்கள் ஒன்பது நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்தனர்.
நேபாள மின்சார ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கத்தின் உள்ளிருந்து மேலும் சிலரின் குரல்கள் கேட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேலும் ஆறுக்கும் அதிகமான பிற சுரங்கங்களில் தனித்தனியாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



