இஒஎஸ்-05 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி எஃப்17 ராக்கெட்
இஒஎஸ்-05 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி எஃப்17 ராக்கெட்
பிரசுரிக்கப்பட்டது
பூமியை கண்காணிக்கும் இஒஎஸ்-05 செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எஃப்17 ராக்கெட், வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இஒஎஸ்-05 செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஒரே இடத்தில் நிலைத்து நின்று இந்தியாவின் பெரும்பகுதியை 'ரியல் டைம்' முறையில் கண்காணிக்கும். இது புயல், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியவும், விவசாயம், வானிலை மற்றும் எல்லைப் பாதுகாப்பு கண்காணிப்பிற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



