காணொளி: நேபாளத்தில் திரிசூலி ராணுவ முகாமுக்கு வெளியே கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: நேபாளத்தில் திரிசூலி ராணுவ முகாமுக்கு வெளியே கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள்
பிரசுரிக்கப்பட்டது

திரிசூலியில், இந்தப் பகுதி நேபாள ராணுவத்தின் ஒரு தற்காலிக முகாமாக மாறியுள்ளது.

பேரழிவால் பாதிக்கப்பட்ட அருகிலுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மணி நேரமும் டஜன் கணக்கான ஹெலிகாப்டர்கள் வந்து, மக்களை மீட்டு மீண்டும் புறப்பட்டுச் செல்கின்றன. இங்குள்ள மீட்புப் பணிகள், திடீர் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு அமைதியாகக் கூடியுள்ளனர். காணாமல் போன தங்களது உறவினர்கள் கிடைப்பார்களா என்பதை அறிய அவர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தப் பகுதிக்குச் செல்வது மிகவும் சவாலானதாகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. பேரழிவில் முழு சாலைகளும் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

இங்கு திரிசூலியில் துயரமும் நம்பிக்கையும் ஒன்றாகக் கலந்திருக்கின்றன.

பலரும் தங்களது உறவினர்கள் பாதுகாப்பாக கிடைப்பார்கள் என்று இன்னும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், நேரம் செல்லச் செல்ல அந்த நம்பிக்கை மெல்ல மங்கத் தொடங்கியுள்ளது.

பெருவெள்ளத்தில் காயமடைந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், நுவாகோட்டில் உள்ள நேபாள ராணுவப் பயிற்சி மையத்திற்கு வெளியே திரண்டுள்ளனர். அவர்கள் வேலிக்கு வெளியே நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பல சுற்றுலாப் பயணிகள் வரிசையில் காத்திருக்கும் காட்சியையும் காண முடிகிறது.

மறுபுறம் திரிசூலி பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. வாகனங்கள் சேற்றில் புதைந்துள்ள காட்சிகளை காண முடிகிறது. மோப்ப நாய்கள், கனரக வாகனங்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவக் குழுவும் பேரழிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு