நேபாள வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்த பெண் 11வது நாளில் மீட்பு

காணொளிக் குறிப்பு,
நேபாள வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்த பெண் 11வது நாளில் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது

கடந்த மாதம் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், இடிபாடுகளுக்குள் இருந்து 11ஆவது நாளான இன்று ஒரு மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

ராய்ட்டர்ஸ் தகவலின்படி, நுவாகோட் மாவட்டத்தில் பகுதியளவு மண்ணில் புதையுண்டிருந்த தனது வீட்டின் நான்காவது தளத்தில் இருந்து இந்த மூதாட்டி மீட்கப்பட்டிருக்கிறார். இவர் பெயர் சண்டிகா ஷ்ரேஸ்தா. இவரது வயது 64. தற்போது சிகிச்சைக்காக காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு