காணொளி: ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய இரான் பாடகிக்கு 74 சவுக்கடிகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய இரான் பாடகிக்கு 74 சவுக்கடிகள்
காணொளி: ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய இரான் பாடகிக்கு 74 சவுக்கடிகள்
பிரசுரிக்கப்பட்டது

ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய பிரபல இரான் பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாடகி பரஸ்தூ அஹ்மதி உள்ளிட்டோருக்கு தலா 74 கசையடிகள் தண்டனையை இரான் அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர். 2024-ல் யூடியூபில் வெளியிடப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடகியின் வழக்கறிஞர் முஸ்தஃபா நிலி கூறுகையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்ததாகத் தெரிவித்தார்.

நவம்பர் 23ஆம் தேதி, தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் சிலருக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார். 2024-ல் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இரானில் பெண்கள் பொதுவெளியில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும், உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அந்நாட்டின் சட்டங்கள் வலியுறுத்துகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு