காணொளி: பனிச்சறுக்கு பாதையில் உற்சாகமாக விளையாடி மகிழும் ‘ஜி ஷி’ பாண்டா
காணொளி: பனிச்சறுக்கு பாதையில் உற்சாகமாக விளையாடி மகிழும் ‘ஜி ஷி’ பாண்டா
பிரசுரிக்கப்பட்டது
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் நகரில் அமைந்துள்ள சன் ஐலேண்ட் ஜெயண்ட் பாண்டா மையத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இவை.
சீன அரசின் ஊடகமான சிஎன்எஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்த வீடியோவில் காணப்படும் பாண்டாவின் பெயர் 'ஜி ஷி'.
நவம்பர் 18ஆம் தேதி, பனியால் மூடப்பட்ட சறுக்குப் பாதையில் இந்தப் பாண்டா உற்சாகமாக விளையாடியது.
செங்டு ஆராய்ச்சி மையத்திலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட இந்தப் பாண்டா, படிப்படியாக வடகிழக்கு சீனாவின் குளிர்காலச் சூழலுக்குப் பழகியுள்ளது. தற்போது பனியில் சுதந்திரமாக விளையாடி மகிழும் காட்சிகள் வெளியாகியுள்ளன
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



