கார்த்திகைத் திருநாளையொட்டி மாவொளி சுற்றிய இளைஞர்கள்
கார்த்திகைத் திருநாளையொட்டி மாவொளி சுற்றிய இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கார்த்திகை திருநாளையொட்டி, தஞ்சையை அடுத்த துலுக்கம்பட்டியில் தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பனையேறிகளுடன் இணைந்து மாவொளி சுற்றினர்.
மாவொளி ஆண் பனை மரத்தின் பூக்களில் இருந்து குறிப்பாகப் பூவின் காம்புப் பகுதியில் இருந்து கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
பனை மரத்தின் பல்வேறு நன்மைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதோடு, அழிவின் விளிம்பில் இருக்கும் பனைத் தொழிலையும், பனையேறிகளின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



