மணப்பெண் தோழிகளை வாடகைக்கு எடுக்கும் மணமக்கள்

காணொளிக் குறிப்பு, மணப்பெண் தோழிகளை வாடகைக்கு எடுக்கும் மணமக்கள்
மணப்பெண் தோழிகளை வாடகைக்கு எடுக்கும் மணமக்கள்
பிரசுரிக்கப்பட்டது

உங்கள் திருமணத்திற்கு மணப்பெண் தோழிகள் மற்றும் மணமகன் நண்பர்களை வாடகைக்கு எடுப்பீர்களா?

தான்சானியாவில், சில தம்பதிகள் தங்களது திருமணத்தில் மணப்பெண் தோழிகளாகவும், மணமகன் நண்பர்களாகவும் இருக்க, அறிமுகமில்லாதவர்களுக்கு பணம் கொடுத்து அழைக்கின்றனர்.

சில தம்பதிகள் தங்கள் திருமண விழாவை மேலும் மெருகேற்றவும், நடன நிகழ்ச்சிகள், சீரான உடைகள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களைச் சேர்க்கவும் இவர்களை ஊதியம் கொடுத்து அமர்த்திக்கொள்கின்றனர். தான்சானியாவில் இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், இளைஞர்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளதாகத் தெரிவிக்கிறது. மணமகளை வழியனுப்பி வைப்பது மற்றும் மணமக்களுக்குத் துணையாகத் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற சேவைகள் இதில் அடங்கும்; இதற்கான கட்டணம் சுமார் 300 டாலர் முதல் 1,200 டாலர் வரை உள்ளது.