காணொளி: டியூப் கேர்ள் சப்ரினா பசூனுக்கு ஏற்பட்ட மனநோய் பாதிப்பு

காணொளிக் குறிப்பு, நோய் பாதிப்பு அறிகுறிகள்
காணொளி: டியூப் கேர்ள் சப்ரினா பசூனுக்கு ஏற்பட்ட மனநோய் பாதிப்பு
பிரசுரிக்கப்பட்டது

டியூப் கேர்ள்' என்று உலகளவில் அறியப்பட்ட சப்ரினா பசூனுக்கு, எதிர்பாராதவிதமாக ஒரு மனநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதன் அறிகுறிகள் அவரை வன்முறையாகவும், நிலையற்றவராகவும் மாற்றின. ஆரம்பத்தில் மருத்துவர்கள் அவருக்கு மனநோய் இருப்பதாகக் கருதியதால், அவர் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பசூனின் குடும்பத்தினர் மேலதிகப் பரிசோதனைகளுக்கு வலியுறுத்தினர்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவருக்குத் தவறாக நோய் கண்டறியப்பட்டதும், உண்மையில் அவருக்கு ஆன்டி-என்எம்டிஏ ரிசப்டர் என்செஃபலைட்டிஸ் என்ற அரிதான ஆனால் குணப்படுத்தக்கூடிய ஆட்டோ இம்யூன் பாதிப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த நோய் மனநல அறிகுறிகள், வலிப்பு, குழப்பம் மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்றவையாக வெளிப்படலாம். பசூனைப் பொறுத்தவரை, டெரடோமாஸ் எனப்படும் கருப்பைக் கட்டிகளால் இது ஏற்பட்டது. அவை அவரது நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்கின. பசூன் இப்போது 'சப்ரினாவின் சட்டம்' என்ற புதிய கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கொள்கை, திடீரென இத்தகைய அறிகுறிகள் தோன்றும் நோயாளிகளுக்குத் தொடர்ச்சியான பரிசோதனைகளை ஒரு வழக்கமான நடைமுறையாக மாற்றுவதை ஆதரிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு