ஜெர்மனியில் போராட்டம்: பிராங்பர்ட் நகரில் கடைகள் சூறை

காணொளிக் குறிப்பு, ஜெர்மனியில் போராட்டத்தின்போது கடைகளை சூரையாடிய போராட்டக்காரர்கள்
ஜெர்மனியில் போராட்டம்: பிராங்பர்ட் நகரில் கடைகள் சூறை
பிரசுரிக்கப்பட்டது

ஜெர்மனியில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

குறைந்தது இரண்டு கடைகள் சூறையாடப்பட்டதுடன், மேலும் பல கடைகள் சேதப்படுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்தார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

இதுகுறித்து பிராங்க்பர்ட் காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நகரின் மையப் பகுதியில் பல கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அவசரகாலப் பணியாளர்கள் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்படுகின்றன. பொதுமக்கள் நகரின் மையப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு