நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் உறவினர்கள் கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற பலர் அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தையடுத்து அங்கு சிக்கியிருப்பதாகவும், சிலர் பற்றி தகவல் தெரியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 49 வயதான விமலா ரவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இதே போன்று கும்பகோணத்தைச் சேர்ந்தவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது உறவினர் தெரிவிக்கிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ள 3 பேரின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். இதே போல யாத்திரைக்காக கோவையில் இருந்து நேபாளம் சென்ற 8 பேரை தொடர்புகொள்ள முடியாததால், கவலை அடைந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேபாளம் சென்ற சந்திரசேகரன் என்பவரின் அண்டை வீட்டார் செய்தியாளர்களிடம் பேசினார்கள் .
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



