இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் முக்கிய நிதி மையமாக மாறுகிறதா குஜராத்?
இந்தியாவின் 'கிஃப்ட் சிட்டி' உலகின் முக்கிய நிதி மையங்களுள் ஒன்றாக மாறுமா?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் காந்திநகருக்கு அருகில் உள்ள கிஃப்ட் சிட்டி, இந்தியாவின் முக்கிய நிதி மையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. உயரமான கட்டிடங்கள், சிறப்பு விதிமுறைகள் மற்றும் உலகத் தரத்திலான வசதிகளுடன், இந்தத் திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. ஆனால், உலகின் முக்கிய நிதி மையமாக மாற இந்த வசதிகள் மட்டும் போதாது. மேலும் பல விஷயங்கள் தேவை.

காலப்போக்கில் குஜராத்தில் உள்ள கிஃப்ட் சிட்டி, ஹாங்காங், துபாய், சிங்கப்பூர் போன்ற உலகின் முக்கிய நிதி மையங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இது தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சர்வதேச நிதிச் சேவை மையமான கிஃப்ட் சிட்டி, உலக அளவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறதா என்பதைப் பற்றி அறிய நிபுணர்களிடம் பேசினேன்.

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிஃப்ட் சிட்டி, உலகளாவிய நிதி மையமாக உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது

ஆனால், ஆரம்ப காலத்தில் கிஃப்ட் சிட்டி மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதன் வளர்ச்சி மெதுவாக இருந்ததால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதில் பலரும் சந்தேகம் கொண்டனர்.

"உலக அளவில் போட்டியிட நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் நல்ல நிர்வாகம் முக்கியமானவை உலகத் தரமான கட்டமைப்பு வசதிகளுடன், அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறோம். ஆனால், லண்டன், நியூயார்க், ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு இணையான நிதி மையத்தை உருவாக்குவதாகக் கூறும்போது, அந்த நகரங்கள் 100 அல்லது 200 ஆண்டுகளாக நிதி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."

கிஃப்ட் சிட்டி நிர்வாகத்தின்படி, நம்பகத்தன்மையை உருவாக்குவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

"கிஃப்ட் சிட்டி ஆரம்ப காலத்தில் என்னென்ன முக்கிய சவால்களைச் சந்தித்தது?"

"மிகப்பெரிய சவால் நம்பகத்தன்மையை உருவாக்குவதுதான். ஆரம்பத்தில், இந்த இடம் வெறும் தரிசு நிலமாக இருந்தது. இத்தகைய திட்டம் உண்மையில் வெற்றி பெறுமா என்று மக்கள் சந்தேகப்பட்டனர்."

சஞ்சய் கவுலின் கூற்றுப்படி, இப்போது நிலைமை மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், கிஃப்ட் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளன.

"கடந்த ஓராண்டில் மட்டும், வேலைவாய்ப்பு சுமார் 38 சதவீதமும், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாங்கள் இப்போது ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளோம்."

கிஃப்ட் சிட்டியின் வளர்ச்சிக்காகப் பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. சர்வதேச நிதிச் சேவை மையம் தொடங்கப்பட்டது. வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டன. மது அருந்துவதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. குஜராத்தில் மதுவுக்கு தடை இருப்பதால், இதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிஃப்ட் சிட்டியில் அரசின் ஆதரவும் நல்ல கொள்கைகளும் நிதித் துறை வளர உதவியுள்ளன. ஆனால், சர்வதேச விமானப் போக்குவரத்து வசதிகள் போன்ற சில துறைகளில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

"சர்வதேச அளவில் வளர வேண்டுமென்றால், விமானப் போக்குவரத்து வசதிகளை இன்னும் அதிகரிக்க வேண்டும்."

தற்போது கிஃப்ட் சிட்டியில் சுமார் 27,000 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களில் பலர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு