நேபாளத்தில் வீட்டைச் சூழ்ந்த வெள்ளம் - வைரல் வீடியோவில் இருந்த குடும்பம் என்ன ஆனது?
நேபாளத்தில் வீட்டைச் சூழ்ந்த வெள்ளம் - வைரல் வீடியோவில் இருந்த குடும்பம் என்ன ஆனது?
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளில், ஒரு வீட்டை நாலாபுறமும் வெள்ள நீர் சூழ்ந்து, அந்த வீட்டின் பால்கனியில் சிலர் செய்வதறியாது தவிப்பதையும் காண முடிந்தது.
இணையத்தில் மிக வேகமாக பகிரப்பட்ட அந்தக் காணொளியில் இருந்த வீடு திரிசூலி நதிக்கரைக்கு அருகில் உள்ளது.
அந்த வீட்டை வெள்ளம் சூழ்ந்தபோது, இரண்டாவது தளத்தின் பால்கனியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 5 பேர் இருந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு காத்மாண்டு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
சீற்றத்துடன் பாய்ந்த வெள்ள நீரால் சுற்றிலும் பேரழிவு ஏற்பட்ட நிலையில், இந்த வீட்டில் வசித்த குடும்பத்தினர் தாங்கள் உயிர் பிழைப்போம் என்று நினைக்கவில்லை என கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



