நேபாளத்தில் கடும் வெள்ளம் - தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேரின் நிலை என்ன?

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், RSS

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Shaktimaya Tamang

பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு 291 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 93 நேபாள நாட்டினர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புகொள்ள முடியாத சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

வடக்கு நேபாளத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் உயிரிழப்புகளும் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வெள்ளத்தில் பல கிராமங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் அணை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே, திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பகுதி நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளது.

திபெத்தில் இருந்து நேபாளத்துக்குப் பாயும் போதேகோசி ஆற்றில் பனி உருகியதால் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். திரிசூலி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பல மாவட்டங்களில் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலைமை குறித்து பிபிசியிடம் பேசிய ராசுவா மாவட்ட தலைமை அதிகாரி நரேந்திர பரியார், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். சேதத்தின் முழு அளவைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இது மிகவும் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் கூறினார்.

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், RSS

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், RSS

படக்குறிப்பு, நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.