காணொளி: தண்ணீரில் பைக் ஓட்டி உலக சாதனை படைத்த சீனர்

காணொளிக் குறிப்பு, தண்ணீரில் பைக் ஓட்டி சாதனை
காணொளி: தண்ணீரில் பைக் ஓட்டி உலக சாதனை படைத்த சீனர்
பிரசுரிக்கப்பட்டது

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தண்ணீரில் வண்டி ஓட்டி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சீன மோட்டார் சைக்கிள் நிறுவனமான ZXMoto-வின் நிறுவனர் ஜாங் ஷு தான் இதனை நிகழ்த்தியுள்ளார்.

அவர், தனக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் தண்ணீரில் 40 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ளார்.

இந்தச் சவாலின்போது, ஆற்றில் பைக்கை ஓட்டிச் சென்ற அவர், ஏற்கெனவே 31 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து படைக்கப்பட்டிருந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு