காணொளி: பேராசிரியர் கலையரசன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் உள்ளூர் காவல் நிலையம் தவறு செய்துவிட்டதாகவும், அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
"கலையரசன் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளூர் காவல் நிலையம் செய்த தவறு. அவர் சில ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதாகப் புகார் வந்ததால், காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த விவரம் காலையில் எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், காவல்துறையினரிடம் விளக்கிக் கூறினேன். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கையை நிறுத்திவிட்டனர். 30 நிமிடங்களுக்குள் அவர் விடுவிக்கப்பட்டார். தவறு நடந்தால் உடனடியாக அதைச் சரிசெய்வோம்," என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

























