காணொளி: பட்டினிப் போராட்டம் நடத்தும் சோனம் வாங்சுக் - டெல்லி ஜந்தர் மந்தரில் நிலை என்ன?
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்தியாவில் கல்விச் சீர்திருத்தங்களைக் கோரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சி.ஜே.பி) என்ற இணையவழி நையாண்டி இயக்கத்தால் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் நடைபெறும் போராட்டத்தின் உடனடி கோரிக்கை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, மே மாத தொடக்கத்தில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கோரிக்கை வலுத்துள்ளது.
வாங்சுக் மட்டும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் அவருடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு என்ன நடக்கிறது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



