காணொளி: 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்கள் சொல்வது என்ன?

இந்திய நாடாளுமன்றத்தில் 2023-இல் பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைத்திருந்தது.

இந்த காரணத்தினால்தான், 2023-ஆம் ஆண்டு சட்டம் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு பத்தாண்டுகளுக்கும் மேலாகலாம் என்று பலர் கவலை தெரிவித்தனர்.

செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டால், 2029-ஆம் ஆண்டு நடக்க உள்ள அடுத்த பொதுத் தேர்தலில் இடஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்பைத் தரக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு