நேபாளம்: வெள்ளத்திற்கு முன்பும் - பின்பும் ஆற்றின் நிலையை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

பட மூலாதாரம், Reuters
நேபாளத்தில் திரிசூலி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை, வெள்ளத்துக்கு முந்தைய மற்றும் அதற்குப் பிந்தைய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள முதல் படம், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இன்று எடுக்கப்பட்ட இரண்டாவது படத்தில், ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள நீரையும் காண முடிகிறது.
நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டு, அதன் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலையில் நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






















