கைப்பம்பில் இருந்து வந்த மதுபானம் - உத்தரபிரதேசத்தில் என்ன நடந்தது?
இந்த காணொளியில் காவல்துறையினர் இந்தச் சிறிய கைப்பம்பிலிருந்து தண்ணீரை எடுக்கவில்லை.. சாராயத்தை எடுக்கின்றனர்!
இந்த வித்தியாசமான சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்துள்ளது. இந்தக் கைப்பம்புக்குக் கீழே சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராகக் கலால் துறையினர் நவம்பர் 21ஆம் தேதி, சனிக்கிழமை, சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின்போது, 340 லிட்டர் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 4,300 கிலோ புளிக்க வைக்கப்பட்ட மூலப்பொருள்கள் சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



