காணொளி: ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மீது சாம்பல் வீசிய போராட்டக்காரர்கள்

காணொளிக் குறிப்பு, காணொளி: ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மீது சாம்பல் வீசிய போராட்டக்காரர்கள்
காணொளி: ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மீது சாம்பல் வீசிய போராட்டக்காரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

பெல்ஜியம் நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஒருவர் மீது சாம்பல் வீசப்பட்டது. பிரஸ்ஸல்ஸில் கடந்த நவம்பர் 10-ம் தேதி நடைபெற்ற புற்றுநோய் தொடர்பான உச்சி மாநாட்டின்போது, ஐரோப்பிய ஆணையத்தின் சுகாதாரம் மற்றும் விலங்குகள் நலத்துறை ஆணையர் மீது இரண்டு போராட்டக்காரர்கள் சாம்பலை வீசினர்.

போராட்டக் குழுவான கேன்சர் கோலெரே வெளியிட்ட காணொளியில், இரண்டு போராட்டக்காரர்களும் மேடையில் ஏறி, ஆலிவர் வார்ஹெலி மீது சாம்பலை வீசுவது பதிவாகியுள்ளது. பின்னர், ஆணையருடன் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட கேன்சர் கோலெரே குழு, உணவு மற்றும் கால்நடைத் தீவனப் பாதுகாப்பு, தாவரப் பாதுகாப்பு, விலங்குகள் நலம் உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘ஆம்னிபஸ் எக்ஸ்' என்ற சட்டத் தொகுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளது.

இந்தச் சட்டத் தொகுப்பு நடைமுறைக்கு வந்தால், உணவுச் சங்கிலியில் "நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளின்" பயன்பாடு அதிகரிக்கும் என்றும், அது மக்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு