அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - அரசிடம் உதவி கேட்கும் பெற்றோர்

காணொளிக் குறிப்பு, காணொளி: எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற அரசு உதவ பெற்றோர் கோரிக்கை
அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - அரசிடம் உதவி கேட்கும் பெற்றோர்
பிரசுரிக்கப்பட்டது

எஸ்எம்ஏ எனப்படும் தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அக்டோபர் 22ஆம் தேதி சென்னையில் சுகாதாரத்துறை செயலாளரிடம் மனு அளித்த அவர்கள், அக்டோபர் 27ஆம் தேதி சென்னையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நோய்க்கான மருந்தின் விலை சுமார் 16 கோடி ரூபாய் என்பதால், தங்களால் நிதி திரட்ட முடியவில்லை என்றும், குழந்தைகளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு