காணொளி: முதல்வர் விஜய் சொன்ன வார்த்தை; எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏ

காணொளிக் குறிப்பு, காணொளி: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் உரை; திமுக கொறடா ஏ.வ. வேலு எதிர்ப்பு
காணொளி: முதல்வர் விஜய் சொன்ன வார்த்தை; எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏ
பிரசுரிக்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "கடந்த ஆட்சிக் காலத்தில் விவசாயிகளும், ஆசிரியர்களும் தங்களது பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தினர். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டார்.

முதல்வர் 110 விதியின்கீழ் அறிக்கை வாசித்துக்கொண்டிருந்த போது பேரவையில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், "110 விதியின் கீழ் முதலமைச்சர் உரை நிகழ்த்தும்போது உறுப்பினர்கள் இடைமறித்துப் பேசக்கூடாது; இதன் மீது விவாதங்களுக்கும் அனுமதியில்லை" எனக் கூறி உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்றார்.

தொடர்ந்து பேசிய திமுக கொறடா எ.வ. வேலு, "சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது அரசின் முதன்மை கடமையாகும். ஆனால், முந்தைய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி 110 விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்வதில் உள்நோக்கம் உள்ளது" எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு