காணொளி: 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்' - அமைச்சர் ராஜமோகன் பேச்சு குறித்து அதிமுக கண்டனம்
காணொளி: 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்' - அமைச்சர் ராஜமோகன் பேச்சு குறித்து அதிமுக கண்டனம்
பிரசுரிக்கப்பட்டது
இயல் இசை நாடகமன்ற தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ராஜமோகன் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல் இசை நாடகமன்ற தலைவர் பதவியை பெற 5 கோடி ரூபாய் வரை தர ஒருவர் முன்வந்ததாகவும், இருப்பினும் தகுதியான புஷ்பவனம் குப்புசாமிக்கே அப்ப பதவி வழங்கப்பட்டதாகவும் மேடையில் அமைச்சர் ராஜமோகன் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அமைச்சர் ராஜமோகனைத் தொடர்புபடுத்தி 5 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்த அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்" எனத் வலியுறுத்தியுள்ளார்.



