ஒடிசா காட்டில் கிடந்த ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள் - இந்தியா வந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு,
ஒடிசா காட்டில் கிடந்த ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள் - இந்தியா வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள காட்டில் ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

இயல்பான வாழிடமான தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இவை கண்டெடுக்கப்பட்டன. தற்போது நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேசக் கடத்தல் கும்பல் ஒன்று இவற்றை நெடுஞ்சாலை அருகே கைவிட்டுச் சென்றதா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு