இரான் போரால் சௌதி அரேபியாவில் மதுபான தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images
இரானில் நடைபெற்று வரும் போர் சௌதி அரேபியாவில் மதுபான விநியோகத்தைப் பாதித்துள்ளது.
பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ராஜாங்க குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று உள்ளது.
ராய்டர்ஸில் வெளியான செய்தியின்படி, மதுபான கடைக்குச் சென்ற 5 பேர் அலமாரிகள் காலியாக இருந்ததாகவும் விலை உயர்ந்த மற்றும் பிரபலமில்லாத பிராண்ட் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எந்தப் பெயரும் இலச்சினையும் இல்லாத அந்தக் கடை முஸ்லிம் அல்லாத ராஜதந்திரிகளுக்காக 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு முஸ்லிம் அல்லாத பணக்கார வெளிநாட்டினருக்கும் திறக்கப்பட்டது.
சௌதி அரேபியாவில் 1952-ஆம் ஆண்டிலிருந்து மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்க உரிமம் அடிப்படையில் செயல்படும் மதுபானக் கடைகளுக்கு குறிப்பிட்ட அளவிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.















