'பொருளாதார போராட்டம்' - மொஜ்தபா காமனெயி அறிக்கை
இரான் மக்கள் "பொருளாதார போராட்டத்தில்" ஈடுபடுமாறு அந்நாட்டின் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், "ராணுவ மோதலில் தனது சிறப்பு வலிமையை இரான் காட்டியது. தற்போது பொருளாதாரம் மற்றும் கலாசார முனைகளிலும் எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளுர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
"தற்போது நெருக்கடியைச் சந்திக்கும் வணிகர்கள் பணியாளர்களை வேலைகளிலிருந்து நீக்க முயற்சிக்கக்கூடாது," என்றும் தெரிவித்தார்.
அதிஉயர் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மொஜ்தபா காமனெயி கேமராவில் தோன்றவோ அல்லது பொதுமக்களுக்கு உரையாற்றவோ இல்லை. எனினும் பல சந்தர்ப்பங்களில் அவரின் அறிக்கைகள் இரான் அரசு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன.