'தார்' கார் வாங்க சித்தப்பா வீட்டில் தங்கம் திருடிய இளைஞர் - சிக்கியது எப்படி?
மகாராஷ்டிராவின் கோலாப்பூரின் பன்காலா பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது சித்தப்பா வீட்டில் இருந்து தங்கத்தை திருடி, அதன் மூலம் தார் கார் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. சமர் என்ற அந்த இளைஞர், திருடிய தங்கத்தை விற்று அந்த பணத்தில் காரை வாங்கியுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த புதிய காருக்கு பூஜை போட, தனது சித்தப்பாவையும் சித்தியையும் அவர் அழைத்திருக்கிறார். பூஜை நிகழ்வுக்கு செல்ல அவரது சித்தி நகையை எடுக்க பீரோவை திறந்த போது அங்கு நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த இளைஞர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், கார் வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என இளைஞர் சமரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கத்தை அவர் திருடியது தெரியவந்திருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



