காணொளி: சகோதரிக்காக மனச்சிதைவு நோயை ஆய்வு செய்யத் தொடங்கிய விஞ்ஞானி
காணொளி: சகோதரிக்காக மனச்சிதைவு நோயை ஆய்வு செய்யத் தொடங்கிய விஞ்ஞானி
பிரசுரிக்கப்பட்டது
கான்சுவேலோ தற்போது டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மனநல மருத்துவத் துறையில் பேராசிரியராக உள்ளார். கான்சுவேலோ குழந்தையாக இருந்தபோது அவருடைய தாய் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதைப் பார்த்தார்.
பின்னர் அவரின் இளைய சகோதரி பதின்ம வயதில் அந்த அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார். கான்சுவேலோவுக்கு இந்தப் பாதிப்பு வராத நிலையில் ஏனென்று அறிய விரும்பினார்.
இது மனச்சிதைவு நோயை ஏற்படுத்துவதற்கான காரணிகளை 20 ஆண்டுகள் ஆராய அவரைத் தூண்டியது.
கான்சுவேலோவின் சகோதரி தற்போது அவருடன் தான் வசிக்கிறார், அவரிடம் தென்பட்ட அறிகுறிகள் சீரடைந்துவிட்டன. மனச்சிதைவு நோய்க்கு எந்த அறியப்பட்ட தீர்வும் இல்லையென்றாலும் தன்னுடைய ஆராய்ச்சி, எதிர்கால சிகிச்சைகளை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு உதவும் என்று கான்சுவேலோ நம்புகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



