மெஸ்ஸி, எம்பாப்பே உள்பட உலகக்கோப்பை கால்பந்தில் யாருக்கு என்ன விருது?

உலகக்கோப்பை கால்பந்து 2026, மெஸ்ஸி - எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2018-இல் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் கிலியன் எம்பாப்பே இடம்பெற்றிருந்தார்.
    • எழுதியவர், எம்மா ஸ்மித்
    • பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

உலகக்கோப்பை கால்பந்தில் கோல்டன் பூட் விருதை இரண்டு முறை பெற்ற முதல் வீரராக பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே உருவெடுத்துள்ளார். 2026 தொடரில் அவர் அதிக கோல் அடித்ததைத் தொடர்ந்து இந்த விருதை வென்றிருக்கிறார்.

8 போட்டிகளில் 10 கோல்கள் அடித்த எம்பாப்பே லியோனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

2022-இல் கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை அவர் வென்றிருந்தார். அடுத்தடுத்த உலக கோப்பைகளில் அவர் இதனைச் சாதித்திருக்கிறார்.

27 வயதான எம்பாப்பே, 1970-இல் மேற்கு ஜெர்மனிக்கு விளையாடிய கெர்ட் முல்லரைத் தொடர்ந்து ஒரு உலக கோப்பை தொடரில் இரட்டை இலக்கத்தில் கோல்கள் அடித்த முதல் வீரராகிறார்.

1958-இல் பிரான்சுக்காக விளையாடிய ஜஸ்டு ஃபான்டெயின் 13 கோலுடனும், 1954-இல் ஹங்கேரிக்காக விளையாடிய சான்டோர் கோக்சிஸ் 11 கோலுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

ஒட்டுமொத்த உலகக்கோப்பைகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் மெஸ்ஸியை விட ஒரு கோல் அதிகம் அடித்து 22 கோல்களுடன் எம்பாப்பே முதலிடத்தில் இருக்கிறார்.

உலக சாம்பியனான ஸ்பெயின் மற்ற விருதுகள் அனைத்தையும் அள்ளிச் சென்றது. அந்த அணியின் கேப்டன் ரோட்ரி தொடரின் சிறந்த வீரராக கோல்டன் பால் விருதை வென்றார்.

உலகக்கோப்பை கால்பந்து 2026, மெஸ்ஸி - எம்பாப்பே

பட மூலாதாரம், Michael Steele/Getty Images

சனிக்கிழமை வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த எம்பாப்பே மெஸ்ஸியை முந்தினார். இருந்தபோதிலும் அந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 6-4 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணியுடன் தோற்றதை அவரால் தடுக்க முடியவில்லை. பிரான்ஸ் அணி இந்தத் தொடரில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மயாமியில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டிக்குப் பிறகு பேசிய எம்பாப்பே "உலக கோப்பையில் நீங்கள் அவ்வளவு கோல்கள் அடிக்கிறபோது அது உங்களை நிச்சயம் வேறொரு நிலைக்கு அழைத்துச் செல்லும்," எனத் தெரிவித்திருந்தார்.

"ஆனால் அதிக கோல்கள் அடித்தவர் என்பதைவிடவும் இறுதிப் போட்டியில் விளையாடுவதையே நான் விரும்புவேன். அது நான் ஓய்வை அறிவித்த பிறகு விட்டுச் செல்லும் மரபுக்கு உகந்ததாக இருந்திருக்கும். ஆனால் இப்போதைக்கு என் மனதில் அது இல்லை." என்றார் அவர்.

குரூப் சுற்று ஆட்டங்களில் செனகல் மற்றும் இராக் அணிகளுக்கு எதிராக எம்பாப்பே கோல் அடித்திருந்தார். அடுத்த சுற்றில் (Last 32) ஸ்வீடனுக்கு எதிராக கோல் அடித்திருந்தார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பராகுவேக்கு எதிராக 70-வது நிமிடத்தில் பெனால்டி இடத்தில் இருந்து வெற்றியைத் தீர்மானிக்கும் கோலையும் காலிறுதிப் போட்டியில் மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோலையும் எம்பாப்பே அடித்திருந்தார்.

ஞாயிறன்று நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்திருந்தால் எம்பாப்பேவை முந்தியிருக்கலாம்.

எனினும் இறுதிப் போட்டியில் 39 வயதான மெஸ்ஸியால் கோல் அடிக்க முடியவில்லை. ஸ்பெயின் 1-0 என்கிற கணக்கில் வென்ற நிலையில் இந்தத் தொடரில் 8 கோல்களுடன் தன்னுடைய கணக்கை முடித்தார் மெஸ்ஸி.

இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல், பிரான்ஸின் டெம்பலே மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் ஆகியோர் தலா 6 கோலுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கோல்டன் பால் - ரோட்ரி (ஸ்பெயின்)

உலகக்கோப்பை கால்பந்து 2026, மெஸ்ஸி - எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோட்ரி ஸ்பெயின் அணிக்காக உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பையையும், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக நான்கு பிரீமியர் லீக் பட்டங்களையும் வென்றுள்ளார்.

மான்செஸ்டர் அணியின் நடுக்கள வீரரான ரோட்ரி, ஸ்பெயின் பெற்ற இரண்டாவது உலக கோப்பை வெற்றியில் முக்கிய முகமாக இருந்தார். இந்தத் தொடரில் சிறந்த வீரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

30 வயதான ரோட்ரிக்கு ஃபிஃபா தலைவர் இன்ஃபேன்டினோ கோல்டன் பால் விருதை வழங்கினார்.

2023-இல் பாலன் டி ஓர் விருது மற்றும் 2024-இல் யூஃபா யூரோ தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் வெற்றிக்குப் பிறகு தொடர் வீரர் விருது ஆகியவற்றைத் தொடர்ந்து தனது மூன்றாவது தனிப்பட்ட விருதை அவர் பெற்றுள்ளார்.

சில்வர் பால் மெஸ்ஸிக்கும் ப்ரான்ஸ் பால் (வெண்கலப் பந்து) எம்பாப்பேக்கும் வழங்கப்பட்டது.

கோல்டன் கிளவ் - உனாய் சைமன் (ஸ்பெயின்)

உலகக்கோப்பை கால்பந்து 2026, மெஸ்ஸி - எம்பாப்பே

பட மூலாதாரம், JUAN MABROMATA / AFP via Getty Images

இந்த உலகக்கோப்பையில் எட்டு போட்டிகளில் ஒரு கோல் மட்டும் விட்டுக் கொடுத்த ஸ்பெயினின் கோல் கீப்பர் உனாய் சைமன் கோல்டன் கிளவ் விருதை வென்றார்.

சைமன் ஏழு போட்டிகளில் கோல்கள் விட்டுக் கொடுக்கவே இல்லை. காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மட்டும் ஒரே ஒரு கோலை விட்டுக் கொடுத்திருந்தார். தன் மீது அணியின் மேலாளர் லூயிஸ் வைத்த நம்பிக்கைக்கு தனது செயல்பாடுகளின் மூலம் அவர் நன்றிக்கடன் செலுத்தினார். ஸ்பெயின் சாம்பியன் பட்டமும் வென்றது.

சிறந்த இளம் வீரர் - பாவ் குபார்ஸி (ஸ்பெயின்)

உலகக்கோப்பை கால்பந்து 2026, மெஸ்ஸி - எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாவ் குபார்ஸி உள்ளிட்ட வீரர்கள் ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

பார்சிலோனா அணியின் சென்டர் பேக் வீரரான 19 வயதான பாவ் குபார்ஸி தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றார்.

ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டத்தில் அவர் முக்கியமான நபராக உள்ளார். இந்தத் தொடரில் ஒரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்த அந்த அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு இரண்டு கோல் வாய்ப்புகள் மட்டுமே கொடுத்தது. அதிலும் ஒன்று கூட இலக்கின் மீது இல்லை.

2010-இல் தென் ஆப்ரிக்காவில் பெற்ற உலக கோப்பை வெற்றியை ஸ்பெயின் மீண்டும் சாத்தியமாக்கிய நிலையில். இந்தத் தொடரில் அந்த அணிக்காக முழுவதும் விளையாடினார் குபார்ஸி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு