காணொளி: பிரமோஸ் ஏவுகணையை இந்தியா விற்பது ஏன்?
காணொளி: பிரமோஸ் ஏவுகணையை இந்தியா விற்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது அதிகம் விவாதிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள் S-400 மற்றும் பிரமோஸ். அதில் பிரமோஸ் ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியாகும். அண்மையில் பிரதமர் மோதியின் இந்தோனீசிய பயணத்தின்போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிலிப்பின்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது. இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? இதற்கு ரஷ்யாவின் ஒப்புதலையும் பெற வேண்டுமா?
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



