காணொளி: அமெரிக்காவில் நூலகத்திற்குள் உலா வந்த கரடி

காணொளிக் குறிப்பு,
காணொளி: அமெரிக்காவில் நூலகத்திற்குள் உலா வந்த கரடி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், உள்ள ஒரு நுலகத்துக்குள் கரடி நுழைந்த காட்சி இது.

அக்டோபர் 14ம் தேதியன்று நூலகம் திறப்பதற்கு முன்பாகவே கருப்பு நிறக் கரடி ஒன்று உள்ளே புகுந்து சுற்றித் திரிந்துள்ளது.

நூலகத்துக்குள் நுழைந்த கரடி, முதலில் சிற்றுண்டிகளைத் தேடிச் சென்றதாகவும், அதில் தேன் நிரப்பப்பட்ட ஒரு ஜாடியும் இருந்ததாகவும் மோனோ கவுண்டி இலவச நூலகங்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக உள்ளே வந்த இந்த கரடி புத்தகங்கள் எதையும் சேதப்படுத்தவில்லை. ஆனால், பூட்டப்பட்டிருந்த நூலகத்துக்குள் கரடி எப்படிப் புகுந்தது என்பது குறித்த்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு