BBC World Service செயலியின் புதிய முகப்பிற்கு வரவேற்கிறோம்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

கவனிக்கவும்: இந்தச் செயலி பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கிடைக்காது. இதில் ஆங்கில மொழிப் பதிப்பு இல்லை.

BBC World Service செயலி பற்றி

BBC World Service செயலி, பல மொழிகளில் நம்பகமான பிபிசி செய்திகளை வழங்கும் ஒரே தளமாகும். உங்களுக்கு விருப்பமான மொழிப் பதிப்பைத் தேர்ந்தெடுத்து, அந்தந்த மொழிக்காகவே செயல்படும் பிபிசி செய்தியாளர்கள் தொகுத்து வழங்கும் பிராந்திய மற்றும் உலகச் செய்திகளைப் பெறுங்கள்.

தெளிவான புரிதலை வழங்கும் நம்பகமான ஊடகவியல் மூலம் தகவலைப் பெறுங்கள்; தவறான தகவல்கள் மற்றும் உள்நோக்கம் கொண்ட தவறான தகவல்கள் பரவுவதிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். நேரடி செய்தி ஒளிபரப்புகள் மற்றும் நேரலைத் தொலைக்காட்சியைப் பின்தொடருங்கள்; பாட்காஸ்ட்களைக் கேளுங்கள்; காணொளிச் செய்திகளை ஒரே இடத்தில் பாருங்கள்.

குறிப்பு: புதிய செயலி பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கிடைக்காது.

நடுநிலையான உலக மற்றும் பிராந்தியச் செய்திகள், முக்கியச் செய்திகள் மற்றும் பகுப்பாய்வு

தலைப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள் மற்றும் நிபுணர்களின் பகுப்பாய்வுகள்

புலனாய்வுகள் மற்றும் விளக்கங்கள்

முக்கிய உலக மற்றும் பிராந்தியச் செய்திகள் குறித்த ஆழமான செய்தியறிக்கைகள், விரிவான வாசிப்புகள் மற்றும் காணொளிகள்; தவறான தகவல்களை நீக்கி, சிக்கலான செய்திகளை விளக்கும் உள்ளடக்கங்கள்.

காணொளிகள்

செய்திகளைப் பற்றிய கூடுதல் புரிதலையும் பல்வேறு கண்ணோட்டங்களையும் வழங்கும் காணொளிகளைப் பாருங்கள்.

முக்கியச் செய்திகளுக்கான அறிவிப்புகள்

புஷ் அறிவிப்புகளைப் (Push Notification) பெற விருப்பத் தேர்வு செய்யுங்கள்; செய்திகள் உடனுக்குடன் உங்கள் சாதனத்தில் அறிவிப்பாக (Notification) வரும்.

பிபிசி பற்றி

பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிபிசி) என்பது பிரிட்டனின் பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனம். இது தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நம்பகமான செய்திகள், பகுப்பாய்வு, பொழுதுபோக்கு சேவை உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

இது வணிக மற்றும்/அல்லது அரசியல் கட்டுப்பாடுகளிலிருந்து சுயாதீனமாகச் செயல்படுகிறது. அந்தச் சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் அரச சாசனத்தின் கீழ் இயங்குகிறது.

பிபிசி செய்திப் பிரிவுக்கு 54 நாடுகளில் உள்ள 64 நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

BBC World Service என்றால் என்ன?

BBC World Service, ஆங்கிலம் உட்பட 45 மொழிச் சேவைகள் வழியாக, காணொளி, ஒலிவடிவம் மற்றும் இணைய உள்ளடக்கங்கள் மூலம் உலகம் முழுவதும் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை வழங்குகிறது. BBC World Service வழியாக, பிபிசி வாரந்தோறும் 503 கோடி மக்களைச் சென்றடைகிறது. சர்வதேசச் செய்தி வழங்கும் நிறுவனங்களில் நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் சுயாதீனத் தன்மையில் பிபிசி முதலிடம் பெறுவதாக உலகளாவிய பார்வையாளர்களால் மதிப்பிடப்படுகிறது.