2032 ஒலிம்பிக் படகுப் போட்டிக்கு தேர்வான ஆற்றில் 500 முதலைகள்
2032 ஒலிம்பிக் படகுப் போட்டிக்கு தேர்வான ஆற்றில் 500 முதலைகள்
பிரசுரிக்கப்பட்டது
பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் படகு போட்டிகளுக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஃபிட்ஸ்ராய் ஆறு தேர்வாகியுள்ளது. அங்கு 500 முதலைகள் உள்ளன.
உவர்நீர் முதலைகள் தென்படுவது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல என்றாலும், கடந்த 40 ஆண்டுகளில் மனிதர்கள் மீது அவை தாக்குதல் நடத்தியதாக எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை.
இந்த ஆற்றில் ஏற்கனவே படகுப் பயிற்சியும் போட்டிகளும் நடக்கின்றன; சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டிலும் தேர்ச்சி பெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



