காணொளி: 3 இரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கிய அமெரிக்கா
காணொளி: 3 இரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கிய அமெரிக்கா
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை மூன்று இரானிய எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்தது. இதில் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவின் கடற்பகுதியில் இருந்த ஒரு கப்பலும் அடங்கும்.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய பின்னர் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மத்தியக் கட்டளை மையம் தெரிவித்தது.
“இரான் அமெரிக்கக் கப்பல்கள் மீது சுட்டால், அவர்களின் எண்ணெய் கப்பல்களை அழித்து மூழ்கடிப்போம்” என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



