காணொளி: ரஷ்ய அதிபரை சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள் - எதற்காக?
காணொளி: ரஷ்ய அதிபரை சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள் - எதற்காக?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்கள் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துள்ளனர். யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்று வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கிரெம்ளின் வெளியிட்ட காணொளியில், அமைதிப் பணிகளுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னரை புதின் வரவேற்பது இடம்பெற்றுள்ளது. தற்போதைய சூழல் "அவ்வளவு எளிதானது அல்ல" என்று புதின் தெரிவித்தார்.
தலைநகரங்கள் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த யுக்ரேனுடன் ஒப்புக்கொண்டதற்காக விட்காஃப் புதினுக்கு நன்றி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



