காணொளி: கேரளாவின் 'லாமின் யமால்' - யார் இந்த சிறுவன்?
காணொளி: கேரளாவின் 'லாமின் யமால்' - யார் இந்த சிறுவன்?
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சக்குவள்ளியைச் சேர்ந்த 15 வயதான ஆலென் ஜேம்ஸ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.
அவரது முகம், தலைமுடி மற்றும் புன்னகை ஆகியவை பார்ப்பதற்கு ஸ்பெயின் மற்றும் பார்சிலோனோ அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லாமின் யமால் போல இருப்பதாக இணையத்தில் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆலெனுக்கும், யமாலுக்கும் உள்ள ஒற்றுமையைப் பலரும் ஏற்கனவே கவனித்திருந்தாலும், அண்மையில் நிகில் மனோஹர் என்பவர் இவரின் வீடியோக்களை தனது சமூக வலைதளதப் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம் இவர் பரவலாக கவனம் பெற்றுள்ளார்.
இந்த தோற்ற ஒற்றுமை இவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகவும் ஆலென் கூறுகிறார். தான் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகர் எனவும் ஆலென் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



