கால்பந்து உலக கோப்பை 2026
உலகக் கோப்பை கால்பந்து முடிவுகள்
உலகக் கோப்பை கால்பந்து 2026: போட்டி அட்டவணை, முடிவுகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சிறப்புச் செய்திகள்
மெஸ்ஸி புதிய சாதனை: கடும் சவால் தந்த சுவிட்சர்லாந்தை அர்ஜென்டினா வெல்ல வித்திட்ட 'திருப்பு முனை' நிகழ்வு
உலகக்கோப்பை காலிறுதியில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஒரு பரபரப்பான வெற்றியை அர்ஜென்டினா பெற்றுள்ளது. 2026 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை அர்ஜென்டினா எதிர்கொள்ளும். இந்தப் போட்டி பிபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இங்கிலாந்திடம் தோல்வி: ஹாலாண்ட் செயல் நார்வேக்கு பின்னடைவானது எப்படி?
உலகக்கோப்பை கால்பந்தில் மயாமியில் நடந்த போட்டியில், கூடுதல் நேரத்தில் நார்வேயை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஒரு கட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இங்கிலாந்து அணி மீண்டு வந்து வெற்றி பெற ஜூட் பெல்லிங்ஹாமின் அபாரமான இரண்டு கோல்கள் உதவின. 1966-க்குப் பிறகு ஆடவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற இங்கிலாந்துக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.
உலகக் கோப்பையில் அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸிக்கு சாதகமாக சலுகைகள் அளிக்கப்படுகிறதா?
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணிக்கும் அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கும் சாதகமாக ஃபிஃபா மற்றும் நடுவர்கள் செயல்படுவதாக எகிப்து உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளது, போட்டி அட்டவணை, நடுவர் நியமனங்கள் மற்றும் பெனால்டி முடிவுகள் குறித்த சதித் திட்டக் கோட்பாடுகளையும் விவாதங்களையும் உலகளவில் தீவிரப்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவிடம் தோல்வி: 'அநீதி' என்று கூறிய எகிப்து மெஸ்ஸியை குறிவைத்தது ஏன்?
உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது. எகிப்துக்கு எதிரான இந்த 3-2 என்ற வெற்றியின் மூலம் அர்ஜென்டினா கால் இறுதிப் போட்டிக்கான தனது இடத்தை உறுதி செய்தது.
'மாட்டின் இதயம், கல்லீரல், தேன்' - நார்வே வீரர் ஹாலாண்டின் உணவு, வாழ்க்கை பற்றிய 5 விஷயங்கள்
ஹாலண்ட் நார்வே அணியை முதன்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ள எர்லிங் ஹாலண்ட், தொடரின் அதிக கோல் அடித்தவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். "தி ஆண்ட்ராய்டு" என்று அழைக்கப்படும் அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஐந்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ





























